ஆந்திராவில் மே மாத இறுதியில் 13% மதுக்கடைகள் மூடல் : ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு

விசாகபட்டினம்

ரும் மே மாத இறுதியில் ஆந்திர மாநிலத்தில் 13% மதுக்கடைகள் மூடப்படுகின்றன.

ஆந்திராவில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் மாநிலத்தில் முழு மது விலக்கு கொண்டு வரப்படும் என அறிவித்திருந்தது.

தற்போது ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இந்த வாரத் தொடக்கத்தில் ஆந்திராவில் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

இதற்கு மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.

அதன்படி அவர் மே மாத இறுதியில் அதாவது இம்மாத கடைசியில் 13% மதுக்கடைகள் மூடப்படும் என உத்தரவு இட்டுள்ளார்