19 வருட இணை பிரியாத நட்சத்திர தம்பதி செல்வமணி, ரோஜாக்கு குவிந்த வாழ்த்து..

டிகை ரோஜாவை ’செம்பருத்தி’ படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகப் படுத்தியவர் இயக்குனர் ஆர்.கே.செல்வ மணி. அதன் பிறகு அடுத்த 10 ஆண்டு களை தாண்டி ரோஜா கோலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந் தார். செல்வமணியை காதலித்து ரோஜா திருமணம் செய்துகொண்டார். யாரும் எதிர்பாராதவிதமாக ஆந்திர அரசியலில் அடியெடுத்து வைத்து மக்கள் பணிகளில் ஈடுபட்டு இன்று எம் எல் ஏ ஆக தேர்வாகி பணியாற்றி வருகிறார். ஆர்.கே.செல்வ மணி பெப்ஸி தலைவராக இருக்கிறார்.


திரைப்பட இயக்குனரும் பெப்சி தலைவ ருமான ஆர்.கே.செல்வமணி நகரி சட்ட மன்ற உறுப்பினரும் ஆர்.கே.செல்வமணி யின் மனைவியுமான ரோஜா தம்பதியின ரின் 19 வது திருமண நாளை முன்னிட்டு அவர்களை நேரில் அழைத்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இருவருக்கும் மலர் தூவி வாழ்த்து தெரி வித்து பாராட்டினார். அருகில் அவர் களின் மகன் மற்றும் மகள் இருவரும் உள்ளனர்.
அதேபோல் திரையுலகை சேர்ந்த பல்வேறு வி ஐபிக்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.