டில்லி:

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி அம்மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடு போராட்டம் நடத்தி வருகிறார்.

இதற்காக மத்திய பாஜக கூட்டணியில் இருந்து அவரது தெலுங்கு தேச கட்சி வெளியேறியது. இதை தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர தெலுங்கு தேசம் முயற்சி செய்து வருகிறது.

இதற்காக எதிர்கட்சி தலைவர்களை சந்திக்க அவர் டில்லியில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் இன்று ஒரு நாள் முழுவதும் நாடாளுமன்றத்தில் சந்திரபாபு நாயுடு இருந்தார். பல கட்சி தலைவர்களுடன் அவர் கலந்துரையாடி நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவு கோரினார். பரூக் அப்துல்லா, திரிணமுல் காங்கிரஸ் பந்தியோபத்யா, சிபிஐ டி.ராஜா, அதிமுக மைத்ரேயன், சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த ராம்கோபால் யாதம் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மறைந்த தலைவர்களின் சிலைகளை அவர் வணங்கினார். பெரும்பாலான எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளபோதும் ஆட்சிக்கு தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை இருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது. இன்று ஒரு நாள் முழுவதும் சந்திரபாபு நாயுடு நாடாளுமன்ற வளாகத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.