வாஜ்பாயின் உடல் நலம் விசாரித்தார் சந்திரபாபு நாயுடு

டில்லி :

முன்னாள் வாஜ்பாய் உடல்நிலை பாதிப்பு காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடர் சிகிச்சை காரணமாக வாஜ்பாய் குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று மாலை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு வாஜ்பாயின் உடல் நிலை குறித்து அவரது குடும்பத்தாரிடம் கேட்டறிந்தார்.