ர்நூல்

ந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் உள்ள கொல்லவனபள்ளியில் விளை நிலத்தில் ஒரு விவசாயிக்கு ரூ. 60 லட்சம் மதிப்புள்ள வைரம் கிடைத்துள்ளது.

மாதிரி புகைப்படம்

பல காலங்களாக கிருஷ்ணா நதிக்கரையில் வைரங்கள் கிடைத்து வருவது வழக்கமான ஒன்றாகும்.  இந்த வைரங்கள் கோல்கொண்டா வைரங்கள் என புகழ் பெற்றவை ஆகும்.   இந்த  பகுதிகளில் வைரங்களைப் பலரும் தேடி வருகின்றனர்.   மாநிலங்களில் மட்டுமின்றி தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு வைரத் தேடல் நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு இந்தப் பகுதியில் உள்ள சரவனரசிம்மா கோவில் அருகே கிடைக்கும் வைரங்கள் விஜாநகர பேரரசர் ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் மற்றும் அவர் அமைச்சர் புதைத்து வைத்துள்ள புதையலில்  இருந்து கிடைப்பதாகப் பலரும் நம்பி வருகின்றனர்.   ஆனால் பூமிக்கடியில் உருவாகும் வைரங்கள் மழைக்காலத்தில் மண்ணுடன் சேர்ந்து அடித்து வரப்பட்டு கரை ஒதுங்குகின்றன  என்பதே உண்மையாகும்.

கடந்த வாரம் ஒரு விவசாயிக்கு அவர் விளை நிலத்தில் இருந்து ஒரு வைரம் கிடைத்துள்ளது.  இந்த வைரத்தின் விலை ரூ. 60 லட்சம் என கூறப்படுகிறது.  அவர் இந்த வைரத்தை உளூர் வியாபாரியான அல்லா பக்‌ஷ் என்பவரிடம் ரூ.13.5 லட்சம் மற்றும் 5 பவுன் தங்கத்துக்கு விற்பனை செய்துள்ளார்.  இந்த செய்தி மாநிலம் முழுவதும் பரவிய போதும் உள்ளூர் காவல்துறையினர் இது பற்றி தெரியவில்லை எனக் கூறி உள்ளனர்.

இந்த மழைக்காலத்தில் இவ்வாறு  பெரிய வைரம் கிடைத்தது இரண்டாம் முறை ஆகும்.  கடந்த மாதம் 12 ஆம் தேதி அன்று ஜோன்னகிரி கிராமத்தில் ஒரு ஆடு  மேய்ப்பவர்  எட்டு கேரட் எடையுள்ள வைரத்தை கண்டெடுத்துள்ளார்.  அவர் அந்த வைரத்தை ரூ.20 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார்.  இந்த வைரத்தின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும்.