காதலனுடன் வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமி! தடியால் தாக்கிய ஊர் பெரியவர்

ஐதராபாத்:

ங்களது பகுதியை சேர்ந்த உறவுக்காற பையனுடன் காதல்வயப்பட்டு வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் இருவரும் இழுத்து வரப்பட்ட நிலையில், காதலி  ஓடியவர்கள், அந்த கிராமத்தினரால் அழைத்து வரப்பட்ட நிலையில்,  சிறுமியை அந்த ஊர் பெரியவர் தடி கொண்டு தாக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆந்திரா மாநிலம் அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள  கே பி டோடி கிராமத்தில், சிறுமி ஒருவர் 20 வயது உறவுக்கார ஆணை காதலித்து வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதையறிந்த அவர்கள் குடும்பத்தினரும்,  கிராமத்தை சேர்ந்தவர்களும், அவர்களை தேடிப்பிடித்து அழைத்து வந்து எச்சரித்து அனுப்பினர். அப்போது,   கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் அந்த சிறுமியிடம் சில கேள்விகளை கேட்டு கிராம மக்கள் முன்பு தடியால் அடிக்கும் வீடியோ, புகைப்படங்கள்  ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து கூறிய போலீசார், அந்த கிராம மக்களும், அச்சிறுமியின் பெற்றோரும் சிறுமியை அடித்த முதியவர் மீது புகார் கொடுக்க முன்வரவில்லை என்று தெரிவித்து உள்ளனர்.