குடிமகன்களுக்கு இனிப்பும், கசப்பும்  கொடுத்த ஆந்திர அரசு..

குடிமகன்களுக்கு இனிப்பும், கசப்பும்  கொடுத்த ஆந்திர அரசு..

மூன்றாம் கட்ட ஊரடங்கு ,பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

பல மாநிலங்கள் மதுக்கடைகளை இன்று முதல் திறக்க ஆணை பிறப்பித்துள்ளன.

பக்கத்து மாநிலமான ஆந்திராவிலும் இன்று கடைகள் திறக்கப்படுகின்றன.

குடிமகன்களுக்கு ‘குட் நியூஸ்’.

காலை 11 மணிக்குத் திறக்கப்படும் கடை மாலை 7 மணிக்கு மூடப்படும்.

மால்கள் நீங்கலாக அனைத்து இடங்களிலும் சரக்கு கடைகள் இன்று முதல் திறந்திருக்கும்.

மாநிலத்தில் மொத்தமுள்ள 3 ஆயிரத்து 500 கடைகளைத் திறக்க ஆணையிடப்பட்டுள்ளது.

ஒரு ‘பேட் நியூஸ்’.

சரக்கு விலையை ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அரசு உயர்த்தியுள்ளது.

25 % அதிகம்.

40 நாட்களுக்கு முன் 100 ரூபாய் கொடுத்து வாங்கிய  பாட்டிலுக்கு இன்று 125 ரூபாய் கொடுக்க வேண்டும்.

’’குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் முதல்வர் ஜெகன்மோகனுக்கு தெரியும். வேறு வழியில்லாமல் மது கடைகளைத் திறக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்’’ என்று சொல்கிறார்கள், அந்த மாநில அதிகாரிகள்.

– ஏழுமலை வெங்கடேசன்