திருப்பதி தேவஸ்தானத்துக்கு நகை விவரங்களை அளிக்க 4 வாரம் கெடு

தராபாத்

திருப்பதி தேவஸ்தானத்தின் பொருப்பில் உள்ள நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் குறித்த விவரங்களை 4 வாரங்களில் சமர்பிக்க வேண்டும் என ஆந்திர உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் முன்னாள் தலைமை அர்ச்சகர்  சமீபத்தில் ஒரு அதிர்ச்சி தகவலை  அளித்தார்.   அவர், “கோவிலில் பல நிலவறைகள் உள்ளன.  அங்கு பல லட்சம் கோடி மதிப்பிலான ஆபரணங்களும் விலை உயர்ந்து பொருட்க்ளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன” என தெரிவித்தார்.   ஆனால் தேவஸ்தானம் அதை மறுத்தது.

இதை ஒட்டி ஐதராபாத்தை சேர்ந்த இருவர் ஏழுமலையான் கோவிலில் உள்ள ஆபரணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் குறித்த விவரங்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டுள்ளனர்னர்.   மேலும் தேவஸ்தானத்தின் வருவாய் குறித்தும் ஐதராபாத்  உயர்நீதிமன்றத்தில்  அளித்துள்ள இந்த மனுவில் கேட்டுளனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தேவஸ்தான அதிகாரிகளிடம் இது குறித்து விரிவான அறிக்கையை அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்த்னர்.   ஆனால் தேவஸ்தானம் இன்று வரை அந்த  அறிக்கையை அளிக்கவில்லை.   இதற்காக அவகாசம் கேட்டுள்ளது.

ஆந்திர நீதிமன்றம் அவர்கள் கோரிக்கையை ஏற்று இன்னும் 4 வார காலத்துக்குள் விவரங்களை அளிக்க வேண்டும் என கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது.   அத்துடன் அதுவரை இந்த மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.