ஆந்திர மக்கள் அதிக குழந்தைகள் பெற வேண்டும் : சந்திரபாபு நாயுடு

மராவதி, ஆந்திரப் பிரதேசம்

ந்திர மக்கள் அதிக அளவில் குழந்தைகள் பெற்று இளைஞர்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறி உள்ளார்.

மத்திய அரசு நாடெங்கும் மக்கள் தொகை அதிகரிப்பு பற்றியும் குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியம் குறித்தும் அனைவரும் வற்புறுத்தி வருகிறது .   இரு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட தகுதி நீக்கம் செய்து அரசு உத்தரவிட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்தது.

ஆனால் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு இதற்கு நேர்மாறாக கருத்து தெரிவித்துள்ளார்.  அவர் ஆந்திர மக்கள் இரண்டுக்கும் அதிகமாக குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.   சந்திரபாபு நாயுடு, “தற்போது இளைஞர்கள் மற்றும் முதியோர் இடையில் ஒரு சமநிலை இல்லாமல் உள்ளது.   அதை சரிப்படுத்தியாக வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

இதே நிலை இன்னும் 20 வருடங்களுக்கு மேல் நீடித்தால் இளைஞர்கள் தொகை மிகவும் குறைந்து விடும்.  ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு இளைய தலைமுறையின் உழைப்பு அவசியம் தேவைப்படுகிறது.   ஆகவே ஆந்திர மாநிலத்தில் இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த கோரிக்கையை நான் விடுக்கிறேன்.

அத்துடன் இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை கிடையாது எனவும் அறிவிக்கிறேன்.    நான் இதற்கு முன்பிருந்தே குடும்பக் கட்டுப்பாட்டை ஆதரித்து வந்திருக்கிறேன்.   ஆனால் தற்போதுள்ள நிலையில் நாட்டின் இளைஞர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளேன்” என தெர்வித்துள்ளார்.

சந்திரபாபு நாயுடு ஏற்கனவே இவ்வாறு பலமுறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.   சீனா மற்றும் ஜப்பான் நாட்டில் மக்கட்தொகை அதிகரித்ததால் குடும்பக் கட்டுப்பாடு பின்பற்றப்பட்டு தற்போது இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதை பல முறை அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.

You may have missed