ஆந்திரா கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.1 லட்சம் கோடி தேவை: நிதி கமிஷனிடம் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

அமராவதி:

ந்திர மாநில உள் கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.1 லட்சம் கோடி நிதி தேவை என நிதி கமிஷனிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினார்.

ஆந்திர மாநிலம் இரண்டாக ஆந்திரா, தெலுங்கான என பிரிக்கப்பட்ட நிலையில், ஆந்திர மாநில கட்டமைப்புக்காக  மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டது என்று நிதி கமிஷன் கூட்டத்தில் ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.

15வது நிதி ஆணைய குழு கூட்டம்  ஆந்திர மாநிலம் அமராவதியில நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  நிதி ஆணைய குழு தலைவர் என்.கே.சிங் மற்றும் உறுப்பினர்கள், மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சர்கள் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நிதிக்குழு கூட்டத்தில் பேசிய   ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். இரு மாநிலங் களாக பிரிந்துள்ளதால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து விளக்கினார். மாநிலத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 1,09,023 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் கூறி உள்ளார்.

மத்திய அரசு ஆந்திர மாநில உள்கட்டமைப்பு பணிக்காக  ரூ. 2,500 கோடி ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்ட நிலையில், 1,500 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கி உள்ளதையும் சுட்டிக் காட்டி னார்.

1971ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இரண்டாக பிரிக்கப்பட்ட ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி,  வருவாய் பற்றாக் குறை மானியங்கள் மற்றும் பேரழிவு நிவாரணம் போன்றவற்றிற்காக ரூ. 22,250 கோடி ரூபாய் மேலும்,  ஆந்திராவில் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் சாலைகள் மேம்பாட்டுக் காக 10,000 கோடி ரூபாய் என தருவதாக மத்திய அரசு கூறியது.

ஆனால், தற்போது மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளையும் உத்தரவாங்களையும் நிறைவேற்ற தவறி விட்டது என்றும் குற்றம் சாட்டினார்.

அதைத்தொடர்ந்து பேசிய, நிதி கமிஷன் தலைவர் என்.கே. சிங், மாநிலத்தின்  அனைத்துத் துறைகளுக்கும் தேவையான நிதி ஒதுக்கப்படும் என்று கூறினார்.