ஆந்திராவில் அதிகரிக்கும் கொரோனா: 24 மணி நேரத்தில் 3693 பேர் பாதிப்பு

அமராவதி: ஆந்திராவில் 24 மணி நேரத்தில் 3,693 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

நாட்டில் இன்னமும் ஓயாமல் வேகம் எடுத்து வருகிறது கொரோனா வைரஸ். மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி என பல மாநிலங்களில் தொற்றுகள் அதிகரித்து வருகின்றன.

அந்த வரிசையில் ஆந்திராவும் இப்போது இணைந்திருக்கிறது. தொடக்கத்தில் குறைவாக காணப்பட்ட கொரோனா தொற்று, தற்போது உச்சத்தில் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3,693 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 44609 ஆக இருக்கிறது. 21,763 பேர் குண்மடைய 586 பேர் உயிரிழந்து இருப்பதாக ஆந்திர சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.