ஆந்திராவில் 7.5 லட்சத்தை கடந்த கொரோனா தொற்று: இன்று மட்டும் 5,653 பேருக்கு பாதிப்பு

ஐதராபாத்: ஆந்திராவில் இன்று 5,653 பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது.

அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, புதியதாக 5,653 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 7,50,517 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 6,194 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தற்போது 46,624 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந் நிலையில், இதுவரை மொத்தம் 6,97,699 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர்.