ஆந்திர மாநில துணை முதல்வருக்கு கொரோனா உறுதி!

அமராவதி:

 ஆந்திர மாநில துணைமுதல்வர் அம்ஜத் பாஷாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக அவர் சிகிச்சைக் காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.  உலக அளவில் 3வது இடத்தில் உள்ளது. தற்போதைய நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை  8,78, 254 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5, 53 ,471பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,174 ஆக அதிகரித்துள்ளது .

ஆந்திராவிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளது. இதுவரை அங்கு  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,235 ஆக உள்ள நிலையில், 14,393 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மேலும், இதுவரை  309 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில்,   ஆந்திர மாநில துணை முதல்வர் அம்ஜத் பாஷாவுக்கு கொரோனா உறுதி யாகியுள்ளது. அம்ஜத் பாஜாவின் மனைவி மற்றும் மகள் உட்பட அவரது குடும்பத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதால் அவர்கள் அனைவரும் திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.