எளிதாக வாழக்கூடிய மாநிலங்களில் ஆந்திராவுக்கு முதலிடம்

டில்லி:

மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் வாழ்க்கையை, மிக எளிதாக வாழக்கூடிய சிறந்த மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா முதலிடம் பிடித்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நகரப் பகுதிகளில் குடிநீர், கழிவு நீர் வசதிகளை மேம்படுத்துவது, மக்களுக்கு தரமான அடிப்படை வசதிகளை உறுதி செய்யும் திட்டத்தை 2015ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இதன்படி வாழ்க்கையை மிக எளிதாக வாழக்கூடிய வகையில் அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பான முறையில் உள்ள மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், ஆந்திரா முதல் இடத்தையும், ஒடிசா 2ம் இடத்தையும், மத்திய பிரதேசம் 3ம் இடத்தையும் பிடித்துள்ளது.