தெய்வீக உடையில் நடந்த திருமணம் : ஆந்திராவில் ஒரு அதிசயம்!

தானுகு, ஆந்திர பிரதேசம்

ஆந்திரப் பிரதேச சாமியார் ஒருவரின் மகளுக்கு தெய்வீக முறையில் திருமணம் நிகழ்ந்துள்ளது.

விதம் விதமாக திருமணம் நடத்துவது என்பது தற்போது ஒரு நாகரீகம் ஆகி வருகிறது.   ஓடும் ரெயிலில் திருமணம், பறக்கும் விமானத்தில் திருமணம்,  கப்பலில் திருமணம் என பலவகை திருமணங்கள் பற்றிய செய்திகள் வருவது சகஜமாகி விட்டது.   இந்த நிலையில் ஆந்திராவில் இந்திய புராண ஸ்டைலில் ஒரு திருமணம் நடந்துள்ளது.

 

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் தானுகு. இங்கு ஒரு ஆசிரமத்தை நடத்தி வருபவர் ஸ்ரீதார் சாமி.   இவர் ஆசிரமம் தானுகுவுக்கு மிக அருகில் உள்ள முக்கமாலா என்னும் இடத்தில் அமைந்துள்ளது.   இவருடைய மகளின் திருமணம் சமீபத்தில் நடை பெற்றது.  அதில் அனைவருக்கும் புராண கதாபாத்திரங்கள் போல் உடை அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.

மணமகள் லட்சுமி தாயார் போலவும், மணமகன் மகாவிஷ்ணு போலவும் உடை அணிந்து திருமணம் செய்துக் கொண்டனர்.   மணமகள் – மணமகன் தாய் தந்தையர் புராண கால மகாராஜாக்கள் போல் உடை அணிந்திருந்தனர்.   அது மட்டும் இன்றி இரு விட்டாரின் நெருங்கிய உறவினர்களும்,  அவர்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கும் கூட புராண கால உடை அணிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் திருமணம் ஆந்திர மக்களிடையே பரபரப்பாக பேசப் பட்டு வருகிறது.