ஆந்திராவில் 79.74% வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்

விஜயவாடா: சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் இணைந்து நடத்தப்பட்ட ஆந்திர மாநிலத்தில், மொத்தம79.74% வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

பல இடங்களில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதானதைத் தொடர்ந்து, திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீட்டின்படி, இந்த வாக்குப்பதிவு சதவிகிதத்தை அளித்துள்ளது தேர்தல் ஆணையம்.

அம்மாநிலத்திலுள்ள 3,93,45,717 வாக்காளர்களில், 3,13,33,163 வாக்காளர்கள் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதேசமயம், ஆந்திராவின் நெல்லூர் மாவட்டம் மற்றும் குண்டூர் மாவட்டத்தின் சில பகுதிகளில், வாக்கு இயந்திரம் பழுதானதைத் தொடர்ந்து, அங்கே மறுவாக்குப்பதிவு நடந்து வருவதற்கான சாத்தியம் உண்டென்று ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

ஆந்திர தேர்தலில், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி ஆகியவற்றுக்கு இடையில்தான் முக்கியப் போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி