அமராவதி:
ந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 28) இந்த தடுப்பூசி திட்ட ஒத்திகை நடக்கிறது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் தயாராகி வரும் நிலையில், அவற்றை வினியோகிப்பதற்கான திட்டங்களை வகுப்பதில் மத்திய-மாநில அரசுகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. இந்த திட்டத்தை சிறப்பாக நடத்தி முடிப்பதற்காக 4 மாநிலங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதில் ஆந்திராவும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 28) இந்த தடுப்பூசி திட்ட ஒத்திகை நடக்கிறது. அங்கு 5 இடங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில் தடுப்பூசி போடுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வழிமுறைகள் அனைத்தும் சோதிக்கப்படுகிறது. இந்த ஒத்திகைக்காக 25 பயனாளர்கள் (சுகாதார ஊழியர்கள்) தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 5 அமர்வுகளாக நடைபெறும் இந்த ஒத்திகையின்போது ஒவ்வொரு அமர்விலும் இந்த ஊழியர்கள் பங்கேற்கிறார்கள்.

இதன் மூலம் இந்த திட்டத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் தெரியவரும் என மாநில சுகாதார கமிஷனர் கட்டமனேனி பாஸ்கர் தெரிவித்தார். இந்த ஒத்திகை முடித்து அது தொடர்பான அறிக்கை மத்திய-மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.