30 லட்சம் வீட்டு பட்டாக்கள் டிசம்பர் 25ஆம் தேதி விநியோகிக்கப்படும்- ஆந்திர அரசு

ஆந்திரா:
ந்திர அரசு டிசம்பர் 25 ஆம் தேதி 23,000 கோடி ரூபாய் செலவில் 30.6 லட்சம் வீட்டு பட்டா ஆவணங்கள்  விநியோகிக்கப்படும்  என்று அறிவித்துள்ளது.
பட்டாக்களை விநியோகிக்கவும், ஆவணங்களை சரிபார்த்து தகுதியானவர்களுக்கு வீடுகள் கட்ட தொடங்கவும், அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக வேளாண்துறை அமைச்சர் குரசாலா கண்ணபாவ் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் 25 ஆம் தேதி அனைவருக்கும் பட்டாக்கள் வழங்கப்படும், அதே நாளில் வீடுகளின் கட்டுமானமும் தொடங்கப்படும், மேலும் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 8,496 வீடுகள் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என்று கண்ணபாவ் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்திற்காக அரசு மற்றும் தனியார் நிலங்களை உட்பட மாநிலம் முழுவதும் 66,518 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், TIDCO  பயனாளிகளிடம் ஒரு ரூபாய் மட்டுமே வசூலித்து வீடுகள் விநியோகிக்கப்படும் என்றும் வேளாண்துறை அமைச்சர் குரசாலா கண்ணபாவ் தெரிவித்துள்ளார்.