ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் ஃபேஸ்புக்கில் அழகான பெண் ஒருவரின் போலியான புகைப்படம் ஒன்றை வைத்து ஒரு சுஜித் ரெட்டி என்ற வாலிபரை ஏமாற்றி அவருடன் கள்ளக்காதல் வளர்த்து இருக்கிறார். புகைப்படத்தில் இருக்கும் அழகான பெண்ணுடன்தான் சாட் பண்ணுகிறோம் என்று நம்பிய அந்த வாலிபர் இப்பெண்ணின் வங்கிக்கணக்கில் ரூ.4 லட்சம் செலுத்தியும் இருக்கிறார்.

fb_danger

அப்பணத்தை வைத்து தனக்கு ஒரு இரு சக்கர வாகனமும் தங்க நகைகளும் வாங்கி ஜாலியாக சுற்றிக்கொண்டு இருந்திருக்கிறார் இந்தப்பெண். ஆனால் சுஜித் ரெட்டிக்கு சந்தேகம் வரவே கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு மிரட்டியிருக்கிறார். இல்லாவிட்டால் தங்கள் ஃபேஸ்புக் கள்ளக்காதல் விஷயத்தை கணவரிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறார்.
இதனால் செய்வதறியாது திகைத்த அந்த பெண்,தற்போதைக்கு 15,000 ரூபாய் தருவதாக சுஜித்தை நெல்லூரில் உள்ள மதனப்பள்ளி பஸ் நிலையத்திற்கு வரச் சொல்லியுள்ளார்.இதற்கிடையில் தனக்கும்,சுஜித்துக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை தனது கணவருக்கு ஃபார்வேட் செய்து தனது சடலத்தை பெற்றுக்கொள்ள வருமாறு அவருக்கு ஒரு அதிர்ச்சி செய்தியையும் அனுப்பி இருக்கிறா.சுஜித் பஸ் நிலையத்திற்கு வரும் முன்னரே அந்த பெண் விஷ எண்ணெய்யை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திக்கொண்டு இருக்கின்றனர்.