ராமர் கோயிலுக்கு 3 மாத ஊதியம் அளித்த ஆந்திர எம்.பி.   

ராமர் கோயிலுக்கு 3 மாத ஊதியம் அளித்த ஆந்திர எம்.பி.

ஆந்திர மாநில ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.யான ரகுராம கிருஷ்ணராஜு, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு 4 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.

இது அவரது மூன்று மாத எம்.பி. ஊதியம் ஆகும்.

அயோத்தியில் கோயில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ள தீர்த்த ஷேத்திர அறக்கட்டளைக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘’ ராவணனனுக்கு எதிரான போரில் ராமனுக்கு அணில் அளித்த பங்களிப்பு போல்  இந்த சிறிய நன்கொடையை நான் அளிக்கிறேன்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

நன்கொடை அளித்துள்ள ராமகிருஷ்ணன், ஒய்.எஸ்.காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.பி. ஆவார்.

அண்மைக்காலமாக அவர் பா.ஜ.க. தலைமையுடன் நெருங்கி வருவதால் , அவரை பதவி நீக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளில் ஒய்.எ.ஸ்.ஆர். காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

-பா.பாரதி.