ஆண்டிப்பட்டி:

மிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் ஒன்றான ஆண்டிப்பட்டியில் அதிமுக, திமுக சார்பில் அண்ணன் தம்பிகள் களமிறக்கப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அங்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட தம்பி முன்னிலையில் இருந்து வருகிறார்.

அதிமுக கோட்டையாக கருதப்படும், தேனி மக்களவை தொகுதிக்குட்பட்ட  ஆண்டிப்பட்டி எம்ஜிஆர், ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி. இந்த தொகுதியில்   சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக திமுக சார்பில் அண்ணன் தம்பிக்கள் களமிறங்கினர்.

மகராஜன் – லோகிதாசன்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில், 5வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் லோகிராஜன் 1257 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

திமுக வேட்பாளர் மகாராஜன் 18ஆயிரத்து 236 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளார். அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் 4 ஆயிரத்து 856 வாக்குகள் பெற்று 3 வது இடத்தில் உள்ளார்.

கடந்த  1996ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதன் பின்னர் 2002, 2006 தேர்தலின்போது ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் நடை பெற்ற 2011 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது தங்கத்தமிழ்செல்வன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஆனால், இவர் டிடிவிக்கு ஆதரவாக மாறியதால், தகுதிநீக்கம் செய்யப்பட்டு, தற்போது அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இங்கு திமுக சார்பாக மகாராஜன் போட்டியிடுவார் என அறிவிக்கபட்டது.  அவரை எதிர்த்து, அவரது  சொந்த தம்பி லோகிராஜன் அதிமுக சார்பாக களமிறக்கப்பட்டார். தற்போது தம்பி லோகிராஜன் முன்னிலையில் இருந்து வருகிறார்…