அவர்களுக்கு ஆண்ட்ரே ரஸ்ஸல் என்றால், இவர்களுக்கு ராகுல் சாஹர்!

சென்னை: மும்பை அணிக்கு எதிராக சற்று எளிய இலக்க‍ை நோக்கி ஆடிவரும் கொல்கத்தா அணியை, ராகுல் சாஹர் மிரட்டி வருகிறார்.

மும்பை அணி பேட்டிங் செய்தபோது, அவர்களை, கொல்கத்தாவின் ஆண்ட்ரே ரஸ் ஸல் திணறடித்தார். அவர், மும்பை அணியின் கடைசி 5 விக்கெட்டுகளையும், சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து காலி செய்தார். அவர்களுள் பொல்லார்டு மற்றும் கருணால் பாண்ட்யா ஆகியோர் முக்கியமானவர்கள்.

தற்போது, கொல்கத்தா அணியை, மும்பையின் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் மிரட்டி வருகிறார். தொடக்கத்திலிருந்து, நடு ஓவர்கள் வரை நன்றாக ஆடிவந்த கொல்கத்தா அணியை, தற்போது தடுமாறச் செய்துள்ளார்.

அவர் இப்போதுவரை 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். நிதிஷ் ரானா, ஷப்மன் கில், ராகுல் திரிபாதி, இயன் மார்கன் ஆகிய முதல் 4 விக்கெட்டுகளை சாஹர் சாய்த்துள்ளார்.

ரஸ்ஸல் கடைசி 5 விக்கெட்டுகள் என்றால், சாஹரோ, முதல் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.