‘பிசாசு-2 ‘ Special போஸ்டரை வெளியிட்டு ஆண்ட்ரியாக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மிஷ்கின்….!

சைக்கோ படத்தின் வெற்றியை தொடர்ந்து மிஷ்கின் இயக்கி வரும் திரைப்படம் பிசாசு 2. இப்படத்தின் பணிகள் பூஜையுடன் இம்மாதம் தொடங்கியது. ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் இப்படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மீண்டும் களமிறங்க, சிவா சாந்தகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கின்றார். சவரக்கத்தி பட புகழ் நடிகை பூர்ணாவும் இந்த படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஆண்ட்ரியாவுக்கு இயக்குனர் மிஷ்கின் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். பிசாசு 2 படத்தில் இடம்பெறும் ஆண்ட்ரியாவின் தோற்றத்தை நள்ளிரவு வெளியிட்ட மிஷ்கின், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.