பாலிவுட் தயாரிப்பாளருக்கும், கன்னட இயக்குனருக்கும் என் மதிப்பு தெரிந்திருக்கிறது : ஆண்ட்ரியா

சாந்தி பவானி நிறுவனம் சார்பில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாளிகை’. தில் சத்யா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அதில் கலந்துக் கொண்டு பேசிய நடிகை ஆண்ட்ரியா, முதலில் கன்னடத்தில் எடுக்க வேண்டிய படம் இது, ஆனால், தனக்கு தமிழில் மார்க்கெட் இருப்பதாக தோன்றியதால் இந்த படத்தை தயாரிப்பாளர் தமிழில் எடுத்துள்ளனர்.

ஒரு பாலிவுட் தயாரிப்பாளருக்கும், கன்னட இயக்குனருக்கும் எனக்கு தமிழில் மார்க்கெட் இருக்கிறது என்பது தெரிந்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் இங்கு இருப்பவர்களுக்கு அப்படி ஏதும் தோன்றவில்லை என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.