ஃபோட்டோவில் ஆண்ட்ரியா எங்கே இருக்கிறார் என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்….!

--

நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா கடைசியாக வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, இது நம்ம ஆள போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

இந்நிலையில் அவர் தனது பள்ளி காலத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை தந்து சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் தனது பள்ளி நாட்களில் இசை பயிற்சி குறித்து தெரிவித்துள்ளார். மேலும் ”இதில் நான் யார் என்று கண்டுபிடியுங்கள்” என கேட்க, ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த போட்டோவில் ஆண்ட்ரியா எங்கே இருக்கிறார் என உங்களுக்கு தெரிகிறதா என்று பாருங்கள்.