2019 ஆம் ஆண்டு ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’.

இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இதன் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் கைப்பற்றி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் ரீமேக்கை கே.எஸ்.ரவிகுமார் தயாரிக்க அவரிடம் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்த சபரி – சரவணன் இருவரும் இயக்கவுள்ளதாகத் தெரிகிறது.