பெண் வேடத்தில் நடிக்கும் அங்காடித்தெரு மகேஷ்…!

நீண்ட இடைவெளிக்கு பிறகு அங்காடித்தெரு மகேஷ் நடிக்கும் தேனாம்பேம்டை மகேஷ் என்ற படத்தின் படப்பிடிப்பு ஞாயிற்றுக்கிழமை காலை பூஜையுடன் ஆரம்பமானது.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிச்சுவாகத்தி படத்தில் நடித்த நடிகை அனிஷா நடிக்கிறார். இவர்களுடன் அம்பானி சங்கர், மகாநதி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, கமலா தியேட்டர் உரிமையாளர் சி.டி.கணேசன், குட்டிப்புலி ராஜசிம்மன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கிராண்ட் சர்வீஸ் மேக்கர்ஸ் (Grand Service Makers) பிலிம்ஸ் சார்பில் பூர்வீகன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவது எம்.சித்திக். இப்படத்தில் ஒளிப்பதிவு – முனீஷ், இசை – ஸ்ரீ சாய் தேவ், எடிட்டர் – பாசில், கலை – கார்த்திக், நடனம் – தீனா, பாடலாசிரியர் – சிவசங்கர், சண்டை பயிற்சி – எஸ்.ஆர்.முருகன் ஆகியோர் தொழில் நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள்.

இப்படத்தில் மகேஷ் வாட்டர் கேன் சப்ளை செய்யும் வாலிபராகவும் பெண் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.