தருமபுரி,

ருமபுரி மாவட்டத்தில் அங்கானி பணியாளர்கள் நியமனம் தேர்வு நடைபெற்றது. இதில், தகுதியில்லாத வர்களுக்கும், கட்சி சார்பானவர்களுக்கு மட்டுமே  அதிகாரிகள் பணி நியமனம் வழங்கப்பட்டது. இதையறிந்த நேர்காணலுக்கு வந்த  ஆதரவற்ற பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களில் சத்துணவு திட்டத்தில் 700 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பொதுவாக இதுபோன்ற பணிகளுக்கு விதவைகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது உண்டு.

ஆனால், தருமபுரி மாவட்டத்தில் இந்த இடங்களுக்கு நேர்காணல் நடைபெற்றது. அப்போது,  கட்சியினர் சார்பாக விண்ணப்பத்தவர்களே தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நியமன கடிதம் வழங்கப்பட்டது.

இதனால் ஆதற்றவற்றோர்,  விதவை சான்று பெற்றவர்கள்,  பணி முன்னுரிமை சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மற்றும் வசதியில்லாத ஏழை பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அனைவரும்  இணைந்து மாவட்ட ஆட்சியர் விவேகானந்தனிடம் புகார் மனு அளித்தனர். தங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஆனால், மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர், அங்கன்வாடி பணிக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்துவிட்டு சென்று விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள்,   தாங்கள் விண்ணப்பித்த பணியிடத்திற்கான வேலையையே வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்து கலெக்டர் அலுவலகத்தில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.