ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி பிரதமர் சென்ற விமானம் இயந்திர கோளாறால் அவசரமாக தரையிறக்கம்!

அர்ஜெண்டினா நாட்டில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து ஜெர்மனி பிரதமர் பங்கேற்கும் முதல் நாள் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

rusia

உலகில் வளர்ச்சி அடைந்த நாடுகள் கொண்ட ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டிற்கான 13வது உச்சி மாநாடு அர்ஜெண்டினா நாட்டின் தலைநகர் புய்னோஸ் ஏய்ரேஸ் நகரில் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.

இந்திய சார்பில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர், ரஷ்ய பிரதமர், சவுதி இளவரசர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஒன்று கூடுகின்றனர். அந்த வகையில் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் பெர்லின் நகரில் இருந்து தனி விமானம் மூலம் அர்ஜெண்டினா புறப்பட்டு சென்றார். அவருடன் அரசு உயரதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் குழுவும் சென்றது.

நெதர்லாந்து நாட்டின்மீது நடுவானில் விமானம் பறக்கும்போது இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து தொடர்ந்து விமானத்தை இயக்க முடியாது என விமான கூறவே, அவசரமாக விமானம் ஜெர்மனி நாட்டின் ரினே – வெஸ்ட்பாலியா மாநிலத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் இன்று நடைபெற்ற ஜி20 மாநாட்டில் ஏஞ்சலா மெர்க்கல் பங்கேற்க முடியாமல் போனது.