கொரோனா வைரஸால் உலக நாடுகள் பல ஆட்டம் கண்டு வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே, தமிழகத்தில் பல்வேறு முன் எச்சரிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதோடு, தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதேபோல், சில பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘உறியடி 2’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் விஷ்மயா. பிரபல மலையாள பாடகர் அபிஜித்தை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

கொல்லத்தில் நடைபெற்ற விஷ்மயா – அபிஜித் திருமணத்தில் இருவரது குடும்பத்தார் மட்டுமே கலந்துக் கொண்டார்கள்.