அஜித்துடன் மூன்றாவது முறையாக இணையும் அனிகா…!

விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை என அஜித்தின் நடிப்பில் இந்த வருடம் இரண்டு படங்கள் வெளியாகி, இரண்டுமே மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.

அஜித்தின் அடுத்தப் படமான ‘தல 60’ படத்தையும் போனி கபூர் தயாரிக்க, எச்.வினோத் இயக்குவது தெரிந்த தகவல் தான் .

இந்த நிலையில், அஜித்துடன் விஸ்வாசம், என்னை அறிந்தால் ஆகிய படங்களில் மகளாக நடித்த அனிகா, ‘தல 60’ யிலும் தான் நடிப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே தன்னை அஜித்தின் மகள், என்று பத்திரிகைகள் எழுதி வரும் நிலையில், தான் மூன்றாவது முறையாக அஜித் பப்ப்பாவுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி, என்று அனிகா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.