தெலுங்கில் உருவாகவுள்ள ‘கப்பேலா’ ரீமேக்கில் அனிகா ஒப்பந்தம்…?

முகம்மது முஸ்தபா இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘கப்பேலா’. அனுராக் காஷ்யப் தொடங்கி பல்வேறு முன்னணி நடிகர்களும் இந்தப் படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளனர்.

இந்தப் படத்துக்குக் கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, தெலுங்கு ரீமேக் உரிமையை சித்தாரா என்டர்டையின்மென்ட் நிறுவனம் கைப்பற்றியது.

இதில் அன்னா பென் கதாபாத்திரத்தில் நடிக்க அனிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.

ஸ்ரீநாத் பாஸி, ரோஷன் மேத்யூ ஆகிய கதாபாத்திரங்களுக்குச் சில முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் இயக்குநர் உள்ளிட்டவை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.