கமதாபாத்

காங்கிரஸ் மீது தொடுத்துள்ள மான நஷ்ட வழக்கை  ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி திரும்ப பெற்றுள்ளார்.

ரபேல் விமான ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டது குறித்து காங்கிரஸ் கடும் புகார் எழுப்பியது.   காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ரிலையன்ஸ் நிறுவனம் முறைகேடுகளை செய்து இந்த ஒப்பந்தத்தில் இடம் பிடித்துள்ளதாக கூரி வந்தனர்.  இதை ஒட்டி ரிலையன்ஸ் நிறுவனம் காங்கிரஸ் மீது மான நஷ்ட வழக்கை தொடர்ந்தது.

இந்த வழக்கில் ரிலையன்ஸ் நிறுவனம் காங்கிரஸ் தலைவர்களான ரந்தீப் சிங் சுர்ஜிவாலா, உமன் சாந்தி, அஷோக் சாவன், அபிஷேக் சிங்வி, சஞ்சய் நிருபம், சுனில் ஜாகர், உள்ளிட பலர் மீது குற்றம் சாட்டி இருந்தது.  அத்துடன் நேஷனல் ஹெரால்ட் உள்ளிட்ட செய்தி ஊடகங்கள் மீதும் குற்றம் சட்டப்பட்டிருந்தது.

ரூ. 5000 கோடி நஷ்ட ஈடு கோரி அகமதாபாத் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.  இந்நிலையில் இந்த வழக்கு திடீரென திரும்ப பெறப்பட்டுள்ளது.  இந்த தகவலை ரிலையன்ஸ் நிறுவன வழக்கறிஞர் ராகேஷ் பாரிக்  நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.   இது குறித்த உத்தரவை நீதிமன்றம் கோடை விடுமுறைக்கு பிறகு வழங்கும் என கூறப்படுகிறது.