ஸ்ரீதேவியின் ரேர் ஃபோட்டோவை ஷேர் செய்த அனில் கபூர்….!

தமிழகத்தில் இருந்து சென்று வடக்கில் உச்சம் தொட்ட நடிகை என்ற பெருமைக்குரியவர் ஸ்ரீதேவி, இந்திய சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டார்

பல எதிர்ப்புகளுக்கு நடுவில் போனி கபூரை திருமணம் செய்த ஸ்ரீதேவி ஜான்வி, குஷி ஆகிய இரண்டு குழந்தைகளுக்கு தாயானார்.

கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றார்.அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

இந்நிலையில் போனி கபூரின் சகோதரரும், நடிகருமான அனில் கபூர் தனது அண்ணி குறித்து டிவிட்டரில் பதிவொன்றை செய்துள்ளார். ஸ்ரீதேவியுடன் கர்மா, ஜன்பாஸ், லாம், பாம்பே டாக்கீஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

ஸ்ரீதேவியுடன் படத்தில் நடித்த போது ஸ்ரீதேவியை தோளில் தூக்கி வைத்தப்படி ஷாட்டுக்கு தயாராக இருக்கிறார் அனில் கபூர். அப்போது ஸ்ரீதேவி மேக் அப் மேனை அழைத்து டச் அப் செய்து கொள்கிறார்.அந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்த கையோடு, ஒரு திறமையான மனிதரால் இப்படி ஒரு போட்டோ எடுக்கப்படும் என்று அப்போது தெரியவில்லை. ஸ்ரீ ஜியின் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்ததற்கு நன்றி ஸ்டிப் மெக்ரி.. அவர் எப்போதும் ஒரு பர்ஃபெக்ஷனிஸ்ட்.. என பதிவிட்டுள்ளார்.