இந்திய விமானப் படை துணைத் தளபதியாக அனில் கோஷ்லா நியமனம்

--

டில்லி:

இந்திய விமானப் படை துணைத் தளபதியாக அனில் கோஷ்லா 1ம் தேதி பதவி ஏற்கிறார்.

இந்திய விமானப்படை துணை தளபதி எஸ்.பி.டியோ என்ற ஷிரிஷ் பாபன் டியோ-வின் பதவிக்காலம் நாளை (30-ம் தேதி) முடிவடைகிறது. இவர் கடந்த 26-ம் தேதி தவறுதலாக தனது துப்பாக்கியால் தொடைப்பகுதியில் சுட்டுக்கொண்டார்.

இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், எஸ்.பி.டியோ-வின் பதவிக்காலம் முடிவதையொட்டி இந்திய விமானப்படையின் புதிய துணை தளபதியாக ஏர் மார்ஷல் அனில் கோஷ்லா நியமிக்கப்பட்டுள்ளார். அக்டோபர் 1ம் தேதி டில்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் அனில் கோஷ்லா பதவி ஏற்கிறார்.