விலங்குகள் நல வாரியம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு!

சென்னை:

மிழகத்தில் விலங்குகள் நல வாரியம் அமைக்கப்படும் என்று தமிழகஅரசு அரசாணை வெளி யிட்டு உள்ளது. இந்த ஆணையத்துக்கு தமிழக முதல்வர் தலைவராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் விலங்குகள் நலவாரியம் அமைப்பதற்கான அறிவிப்பு தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது,

விலங்கு வதைத் தடுப்பு சட்டம் 1960-ன் பிரிவு 4-ன் படி இந்திய விலங்குகள் நலவரியத்தின் வழி காட்டுதலின் அடிப்படையில் மாநில விலங்குகள் நல வாரியம் அமைக்கப்படுகிறது. தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தின் தலைவராக தமிழக முதலமைச்சர் பழனிசாமி இருப்பார். துணைத் தலைவராக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இருப்பார்.

மேலும், தலைமைச் செயலாளர், பல துறை செயலாளர்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாடு விலங்குகள் நலவாரியத்தின் நிர்வாக குழு தலைவராக கால்நடை பராமரிப்புத் துறை யின் முதன்மைச் செயலாளர் இருப்பார். காவல்துறை கூடுதல் இயக்குனர், மாநகராட்சி ஆணையர், வனத்துறை அதிகாரிகளும் இந்த விலங்குகள் நலவாரியத்தின் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.