பாங்காக்

சிய சுற்றுலாத்துறையினரால் யானைகள் கொடூரமாக வதைபடுவதாக சர்வதேச வனவிலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் தாய்லாந்து நாட்டின் விலங்குகள் நல அமைப்பால் அந்நாட்டின் காடுகளில் பல குட்டிப் புலிகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப் பட்டன.   அவைகள் சுற்றுலாத்துறையினரால் கொல்லப்பட்டிருக்கலாம் என்னும் சந்தேகத்தில்,  அனைத்து விலங்குகளையும் பற்றிய ஒரு சர்வே எடுக்கப்பட்டது.   அதில் யானைகள் மிகவும் அவதிக்குள்ளாவதாக தெரிய வந்துள்ளது.

அந்த அறிக்கையில் காணப்படுவதாவது :

”சுற்றுலாவுக்காக யானைகளை பயன்படுத்தும் ஆசிய நாடுகள் கம்போடியா, இந்தியா, லாவோஸ், நேப்பாளம், இலங்கை, மற்றும் தாய்லாந்து ஆகும்.  இந்த நாடுகளில் 3000க்கும் மேற்பட்ட யானைகளுக்கு சரிவர உணவு, ஓய்வு ஆகியவை கொடுக்கப்படுவதில்லை.  யானைகளுக்கு அளவுக்கு மீறி பணிகளில் அமர்த்தப்படுகின்றன. தாய்லாந்தில் மட்டும் 4000 யானைகள் சுற்றுலாத்துறையில் பணி புரிய பழக்கப் படுத்தப்பட்டுள்ளன.

இந்த யானைகள் வித்தை காட்டவும், பயணிகளின் சவாரிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.  ஆனால் அதே யானைகளை, வெறும் காட்சிப் பொருளாக மட்டும் பயன்படுத்தினால் யானைகளுக்கு இவ்வளவு அவதி இருக்காது.” என அந்த அறிக்கை கவலை தெரிவிக்கிறது.

ஆனால் சுற்றுலாத்துறை இதை மறுத்துள்ளது.  அனைத்து யானைகளும் நன்கு கவனிக்கப்படுவதாகவும்,  தேவையான உணவு, ஓய்வு அளிப்பதுடன், மருத்துவ பரிசோதனைகளின் மூலம் அவைகளின் உடல்நலமும் பேணப்படுவதாகவும் கூறுகிறது.