இந்திய விலங்குகள் நல வாரியம் (AWBI), சுற்றுச்சூழல் அமைச்சகம் தனது கருத்தைப் புறக்கணித்து விட்ட காரணத்தினால், சர்ச்சைக்குரிய ஜல்லிக்கட்டு “காளை-கட்டுப்படுத்தும்” விளையாட்டைத் தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சகத்திடம் கூறியுள்ளது. AWBI சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் வரும் விலங்கு நல்வாழ்விற்கான ஒரு சட்டரீதியான ஆலோசனை தரும் அமைப்பு.
ஜல்லிக்கட்டு
இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றமத்தின் தலையீட்டை நாடிய பின்னர் அமைச்சகம் வெளியிட்ட ஒரு நோட்டீஸிற்கு வாரியம் பதிலளித்தது.
மே மதம் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்த அரசின் முடிவை AWBI எதிர்த்ததினால் சுற்றுச்சூழல் அமைச்சகம் 28 மார்ச் அன்று AWBI க்கு நோட்டீஸ் விட்டது.
ஜனவரி 7 அன்று, விலங்கு உரிமை ஆர்வலர்களால் விமர்சிக்கப்படும் கொடுமையான ஜல்லிக்கட்டு விளையாட்டைச் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. AWBI மற்றும் இந்திய விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் இந்திய விலங்குகளின் நெறிமுறையான நடத்தைக்கு உதவும் அமைப்பு (பேடா), போன்ற விலங்கு உரிமைகள் அமைப்புக்கள் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று உத்தரவிற்கு தடை ஆணை வாங்கினர்.
மே 2014ல் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டை தடை செய்து வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக அரசாங்கத்தின் அறிக்கை இருக்கிறது என்று அவர்கள் வாதிட்டனர். எனினும், AWBI யின் இந்தச் செயல் அரசாங்கத்துடன் ஒத்துப் போகவில்லை அதனால் அரசாங்கம் 28 மார்ச் அன்று காரணம் கேட்டு ஒரு நோட்டீஸ் வெளியிட்டது.
“நான் டிசம்பர் 31, 2015 அன்று சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் வானிலை மாற்றம் அமைச்சகத்திற்கு ஜல்லிக்கட்டில் காளைகள் பயன்படுத்த அனுமதித்து ஒரு அறிவிப்பை வெளியிடுவதற்கு எதிராக அதனை எச்சரித்துக் கடிதம் எழுதினேன் … ஏனெனில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி, அமைச்சகம் இந்த விஷயத்தில் எங்களின் கருத்தையும் கேளாததால் நாங்கள் இந்த முடிவை எடுக்கும் கட்டாயத்தில் உள்ளோம். எனினும், எங்களது தொடர்புக்கு எந்தப் பதிலும் வரவில்லை, எங்களது கருத்தை  அசட்டை செய்தனர், ” என்று AWBI தலைவர் ஆர்.எம்.கார்ப் நோட்டீஸிற்கு பதில் கூறினார்.
அறிக்கையைத் திரும்பப்பெற அமைச்சகத்திற்கு வலியுறுத்தி, நாட்டில் விலங்கு நலத்தை ஊக்குவிக்க மற்றும் தேவையற்ற வலி மற்றும் துன்பத்திற்கு விலங்குகளை உட்படுத்துவதிலிருந்து பாதுகாக்கவும் தான் AWBI ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்று கார்ப் குறிப்பிட்டார்.