விஜய்யின் அறுபத்தி நான்காம் படமான மாஸ்டர் படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் . விஜய் சேதுபதியுடன் ஆண்ட்ரியா , ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோஹன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் .

இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார் .சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் இப்படத்தில் உள்ளது .

இந்தப் படத்தின் திரைக்கதையில் லோகேஷ் கனகராஜுக்கு உதவி செய்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தீனா நடித்துள்ளார் .

மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்தது. ஏப்ரல் 9-ம் தேதி படத்தை திரையங்குகளில் வெளியிட திட்டமிட்டு போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இதையடுத்து சென்னை நட்சத்திர ஹோட்டலில் வரும் 15-ம் தேதி மாஸ்டர் பட இசைவெளியீட்டு விழா நடைபெறுகிறது. ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் இந்த விழாவை நேரலையாக ஒளிபரப்புகிறது சன் டிவி. அதற்கான பிரத்யேக ட்ரெய்லரையும் சன் டிவி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் “வாத்தி கம்மிங் ஒத்து” பாடலுக்கு இசையமைப்பாளர் அனிரூத் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், அனிருத் தன் ஸ்டுடியோவில் இருந்து அதே நடனத்தை ஆடியுள்ளார்.