கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வளம் வருபவர் இசையமைப்பாளர் அனிருத்.

இவரின் அணைத்து பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது.

சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு முன்பு அனிருத் இசை நிகழ்ச்சிகள் மற்றும் கச்சேரிகளில் கீபோர்டு வாசித்து வந்துள்ளார்.

அப்படி அவர் எட்டு வருடங்களுக்கு முன்பு ஒரு திருமண விழாவில் கச்சேரியில் வாசித்த வீடியோவை ஒருவர் youtubeல் வெளியிட்டுள்ளார்.

இதை தன் ட்விட்டரில் பதிவிட்ட அனிருத் “நான் 8 வருடங்கள் முன்பு திருமண கச்சேரியில் கீபோர்டு வாசித்த வீடியோ இது. இந்த விடீயோவை எடுத்து வெளியிட்டவருக்கு நன்றி. உண்மையிலேயே இதயத்தைத் தூண்டும் வீடியோ இது” என தெரிவித்துள்ளார்.