ன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்  ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான பேட்ட படத்துக்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்த நிலையில், மீண்டும் ரஜினி படத்துக்கு இசை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ரஜினி – ஏ.ஆர். முருகதாஸ் இணையும் படத்துக்கு இசையமைக்க இருப்பதாக அனிருத் கூறி உள்ளார்.

கமல் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன்-2 படத்துக்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில், தொடர்ந்து ரஜினி படத்துக்கும் இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

ரஜினி நடிக்கும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு தான் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகப் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ட்விட்டரில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அனிருத்தும் இணைந்துள்ளார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரது படங்களுக்கு அடுத்தடுத்து இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்திற்குக் கிடைத்திருப்பதால் அதை அதிர்ஷ்டம்  என்று திரையுலகினர் கூறி வருகின்றனர்.

அனிருத் ரஜினிகாந்த்தின் மிக நெருங்கிய உறவினர் என்பதால் பேட்ட படத்தில் அனிருத்துக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தார் ரஜினிகாந்த். அவரும் அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டதால், தற்போது தனது அடுத்த படத்திற்கும் அனிருத்தே தொடர்ந்துள்ளார்.