இன்னுமா அனிருத்தை நம்புறீங்க விக்னேஷ் சிவன்….!

தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோரை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்திற்கு விக்கியின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் தான் இசையே.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் அனிருத் மீது அபார நம்பிக்கை வைத்திருப்பதை ரசிகர்கள் இன்னுமா அனிருத்தை நம்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

அனிருத் காப்பி அடித்ததாக கூறும் பாடல்கள் :

ஒரு குட்டி கதை

மாஸ்டர் படத்தில் வரும் குட்டிக் கதை பாடல், ஏற்கனவே வடிவேலு நடிப்பில் வெளியாகியிருந்த, ராஜகாளியம்மன் படத்தின் சந்தன மல்லிகையில் பாடலிலிருந்து சுடப் பட்டதாக பலர் கூறி வருகின்றனர்.

சும்மா கிழி

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் படத்தின் சும்மா கிழி பாடலை, அய்யப்பன் பாடலான கட்டோட கட்டும் கட்டி எனும் பாடலிலிருந்து எடுத்ததாக கூறியுள்ளனர்.

ஆலுமா டோலுமா

அஜித் நடிப்பில் வெளியான ஆலுமா டோலுமா பாடல் சிம்பு வெறித்தனமாக நடனமாடியிருக்கும் கண்ணம்மா கண்ணம்மா மீனு வாங்க போலாமா பாடலிலிருந்து எடுக்கப்பட்டதாக கூறுகின்றனர்.

எனக்கு கல்யாண வயசுதான் வந்துடிச்சிடி

நயன்தாரா நடிப்பில் கோலமாவு கோகிலா படத்தில் வரும் எனக்கு கல்யாண வயசுதான் வந்துடிச்சிடி பாடல் ஏதோ ஒரு ஆங்கில பாடல் ஆல்பத்திலிருந்து எடுத்ததாக குற்றம் சாட்டியவர்களும் உண்டு. அந்த பாடலை உருவாக்கியவர் பெயர் சன்னன். டோன்ட் லை என்று ஆரம்பிக்கும் அந்த பாடலின் இசை அப்படியே கல்யாண வயசு இசைப் போலவே இருக்கிறது.

ஊதுங்கடா சங்கு

ஊதுங்கடா சங்கு பாடலின் இசை ட்ரேய்ஸ் என்பவரின் பிரபல பாடலிலிருந்து எடுக்கப்பட்டதாக கூறிவருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-