ஷங்கர் படத்தில் கமலுடன் இணையும் அனிருத்

சென்னை

மல் நடிக்க ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார்.

சுமார் 22 வருடங்களுக்கு முன்பு கமல் – ஷங்கர் இணைப்பில் வெளியாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்த படம் இந்தியன். அதன் பிறகு ஷங்கர் – கமல் இணைந்து பணியாற்றவில்லை. ரசிகர்கள் இருவரின் கூட்டணியில் படங்களை மிகவும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்தியன் 2 திரைப்படத்தில் ஷங்கருடன் இணைவதை கமலஹாசன் தெரிவித்தார்.

ரஜினியுடன் இணைந்த 2.0 படத்தை முடித்த ஷங்கர் இந்தியன் 2 படத்துக்கான பனிகளில் மும்முரமாகி உள்ளார். கடந்த 14 ஆம் தேதி பூஜை உடன் செட் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவத்க் தகவல்கள் வெளியாகின.

தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளராக அனிருத் தேர்வு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. ரஜினியின் பேட்ட படத்துக்குப் பின் கமலுடன் இணையும் அனிருத் இது குறித்து தனியார் பண்பலையில் பேசி உள்ளார். அப்போது அவர் ஷங்கரை தாம் இளையவன் என்றாலும் தம்மை ஒரு நண்பரைப் போல் நடத்துவதாக தெரிவித்துள்ளார்.