தர்ஷனை ஹீரோவாக்கப் போவது கமல் இல்லையாம்….!

--

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த தர்ஷன். ரசிகர்களை வெகுவாக கவர்ந்த காரணத்தால் தானே கோலிவுட்டில் அறிமுகம் செய்ய முன் வந்தார் உலக நாயகன் கமல் ஹாஸன்.

தர்ஷன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்று கூறப்பட்டது.

தர்ஷன் தான் முதல் படத்தில் ஒப்பந்தமாகிவிட்டதாகவும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்றும் இன்ஸ்டாகிராமில் சந்தோஷமாக அறிவிப்பு வெளியிட்டார்.

ஆனால் ஏனோ இன்னும் அதற்கான அறிகுறியே இல்லை . கமல் தயாரிப்பில் தர்ஷன் நடிக்கும் படம் எதனாலோ நடக்கவில்லை.

இந்நிலையில் தர்ஷன் புதுமுக இயக்குநரின் படத்தில் நடிக்கவிருக்கிறார். தர்ஷன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

லாக்டவுன் முடிந்த பிறகு இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.