சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினியின் புதிய படத்துக்கு அனிருத் இசை

ன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள ரஜினியின் புதிய படத்துக்கு அனிருத் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக ரஜினி படத்துக்கு இசை அமைக்க வேண்டும் என்ற அனிருத்தின் ஆசை நிறைவேறி இருப்பதாக  கூறப்படுகிறது.

இதற்கான  அதிகாரப்பூர்வமான அறிவிப்பை  சன் பிக்சர்ஸ் நிறுவனமும் அறிவித்துள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் அதிரடி அரசியல் படமான இதில், ரஜினி இரு வேடங்களில் நடிப்பார் எனத் தெரிகிறது. மற்ற விவரங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.