சை அமைப்பாளர் அனிருத் தமிழில் பல படங்களுக்கு இசை அமைப்ப துடன் பின்னணி பாடல்களும் பாடியும் வருகிறார்.
தற்போது கமல்ஹாசனின் இந்தியன்2. நயன்தாரா, விக்னேஷ் சிவனின காத்துவாக்குல ரெண்டு காதல், சிவகார்த்திகேயனின் டாக்டர், சியான் 60 போன்ற படங் களுக்கு இசை அமைக்கிறார்.
இசையமைப்பாளர் அனிருத், பிரபல பாடகி ஜோனிடா காந்தியை காதலிப் பதாக கிசுகிசு பரவி வருகிறது. டாக்டர் படத்திற்காக ஜோனிடா காந்தி யும், அனிருத்தும் சேர்ந்து ‘செல்லம்மா. செல்லாம்மா பாடல் பாடினார்கள். இப்படத்தில் சிவ கார்த்திகேயன் நடிக்கிறார்.


பாடகி ஜோனிடா டெல்லியில் பிறந்தவர் . இவரை ‘ஓ காதல் கண்மணி; படத்தில் ’மெண்டல் மனதில்’ பாடல் அவரை தமிழில் அறிமுகப்படுத்தினர் ஏஆர்.ரஹ்மான்.

 

பிரபல நடிகை ஆன்ட்ரியாவுடன் அனிருத் லிப் டு லிப் முத்தம் தருவதுபோல் சில வருடங் களுக்கு முன் ஒரு புகைப்படம் வெளியனது. அது மார்பிங் செய்யப் பட்ட படம் என்று கூறப்பட்டது. அதன்பிறகு வேறு காதல் கிசுகிசுவில் சிக்காமலிருந்த அனிரூத் தற்போது ஜோனிடாவுடன் காதல் கிசுகிசுவில் மாட்டி இருக்கிறார். நிஜமா? பொய்யா என்பது இருவரில் ஒருவர் வாய்திறந் தால்தான் தெரியும்.