சிவனையும் மாயர்களையும் மையமாகக் கொண்டு பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகும் படம் ‘மாயன்’.. ராஜேஷ் கண்ணா தயாரித்து இயக்கும் இந்த படம் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் தயராகிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் ஃபாக்ஸ் & கிரோவ் ஸ்டியோஸ் (FOX & CROW STUDIOS) நிறுவனமும், மலேசியாவின் டத்தோ பாதுக்கா ஸ்ரீ டாக்டர்.மோகன சுந்தரத்தின் ஜி.வி.கே.எம் எலிபெண்ட் பிக்சர்ஸ் (GVKM ELEPHANT PICTURES) நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஆவார்.

மலேஷிய நடிகர் வினோத் மோகன், பிந்து மாதவி , பியா பாஜ்பை, ஜான் விஜய், ஆடுகளம் நரேன், தெறி தீனா, ராஜ சிம்மன், கஞ்சா கருப்பு, ஸ்ரீ ரஞ்சனி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாள அனிருத் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இப்படத்தில் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார்.