சிவகார்த்திகேயன், அனிருத் காமெடி நடன வீடியோ..

--

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிக்கும் படம் ’டாக்டர்’. நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். வினய், யோகிபாபு, கலையரசு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் .
இப்படத்திலிருந்து ’செல்லம்மா செல்லம்மா’ பாடல் ரெக்கார்டிங் வீடியோ வெளியிடப்பட்டது. சிவகார்த்திக்கேயன் எழுதிய பாடலை அனிருத் பாடினார். பாடல் ரெக்கார்டிங் வீடியோ யூடியூபில் வெளியாகி வைரலானது.


இந்நிலையில் இன்று இப்பாடலின்போது நடந்த சில காமெடி நடனத்தை வெளி யிட்டிருக்கிறார்கள். அனிருத். சிவகார்த் திகேயன் சேர்ந்து ஆடும் குத்து நடனம் இடம்பெற்றிருகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் ’மிஸ்டர் லோக்கல்’, ’நம்ம வீட்டு பிள்ளை’, ’ஹீரோ’ ஆகிய படங்கள் கடந்த ஆண்டு வெளியாகின இந்த ஆண்டில் ’டாக்டர்’ படத்தை ஹிட் படமாக்கும் முயற்சியில் படக்குழு களம் இறங்கி உள்ளது. அடுத்து சிவகார்த்திகேயனின் நடிப்பில் ’அயலான்’ உருவாகிறது.

 

You may have missed