விஷாலின் முன்னாள் காதலிக்கு விரைவில் திருமணம்…..!

விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களில் நடித்த அனிஷா அல்லா ரெட்டியும், விஷாலும் காதலித்து வந்தனர். இதையடுத்து ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்தது.

விஷாலுக்கும், அனிஷாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் திருமணமத்தை நிறுத்தியதாக கூறப்பட்டது.

பிரிந்த பிறகு விஷாலும், அனிஷாவும் அது குறித்து பேசவில்லை. மேலும் ஒருவர் மீது மற்றொருவர் புகார் தெரிவிக்கவும் இல்லை. டீசென்டாக அமைதியாக இருந்துவிட்டனர். தான் விஷாலுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கினார் அனிஷா.

இந்நிலையில் அனிஷாவுக்கு அவர் வீட்டில் மாப்பிள்ளை பார்த்து திருமண தேதியை முடிவு செய்துள்ளார்களாம். விரைவில் அனிஷாவுக்கு திருமணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.