தூத்துக்குடி:  திருச்செந்தூர் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் கார் உடைககப்பட்ட சம்ப வம் பரபரப்பையும், பதற்றத்தையும்  ஏற்படுத்திய நிலையில், காரை உடைத்தது தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம்  தட்டார்மடம்அருகே உள்ள சொக்கன்குடியிருப்பு,  தண்ணீர் லாரி ஓட்டுநர் செல்வன் காட்டுக்குளம் பகுதியில் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த கொலையின் பின்னணியில் நில விவகாரம் இருந்ததாகவும், இதில் அதிமுக வினர் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும், அவர்களுக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாக, அவரது உடலை வாங்க மறுத்து போராட்டங்கள் தொடர்ந்து வந்தன.

இந்த போராட்டத்திற்கு திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான அனிதா ராதாகிருஷ்ணன், போராட்டத்தில் கலந்துண்டு ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில் அவரது,  வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது காரை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினர் .

இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கடும் கண்டனம் தெரிவித்திரந்தார்.

இந்த நிலையில், காரை உடைத்த மர்ம நபர்கள் குறித்து, அனிதாராதாகிருஷ்ணன்  வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவானதைக் கொண்டு காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டனர்.

இதில், காரை உடைத்தவர்கள்,  ஜின்னா மற்றும் செல்வநாயகம்  என்பது தெரியவந்ததாகவும், அவர்களை கைது செய்து உள்ளதாகவும், காவல்துறை தெரிவித்து உள்ளது.